கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த 21 வயது சண்முகம் என்கிற பாலா, சென்னையில் வேலை பார்த்து வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தவர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. நேற்று இரவு நாடக மேடையில் மது அருந்தும்போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்த அவரை லாலாப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.