கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா வீரராக்கியத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (38). இவர் நேற்று முன்தினம்(அக்.29_ தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டில் வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோவில் இருந்த 7 கிராம் நகை திருட போனது. விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பாலராஜபுரத்தை சேர்ந்த பெரியசாமி (எ) ஜெகன் என்பவர் மீது மாயனூர் போலீசார் நேற்று(அக்.30) வழக்கு பதிந்து கைது செய்தனர்.