திருச்சி மாவட்டம் தொட்டியம் உண்ணியூர் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (30) என்பவர் கடந்த 17ஆம் தேதி மகிளிப்பட்டி சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது கிருஷ்ணன் ஓட்டி வந்த டிவிஎஸ் எக்ஸெல் வாகனம் இவர் மீது மோதியதில், சரவணகுமாருக்கு வலது கால் முழங்கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.