செங்குளம் பகுதியில் பூமி பூஜை செய்தும் பணி தொடங்கவில்லை

432பார்த்தது
செங்குளம் பகுதியில் பூமி பூஜை செய்தும் பணி தொடங்கவில்லை
கரூர் மாவட்டம் மத்தகிரி, செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் 2 கழிவறைகள், 4 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். பணிகள் தொடங்காமல் 3 மாதங்கள் கடந்துவிட்டன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.