கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான மலைப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று அய்யர்மலை கிரிவலப் பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் அதிவேகமாகச் சென்றதில், சாலையில் கடந்து சென்ற இரண்டு குரங்குகள் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தன. பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குரங்குகளுக்கு உணவு அளித்து வந்த நிலையில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.