தெற்கு மைலாடியில் 22 ஆம் ஆண்டு திருவிழா நிகழ்ச்சி

0பார்த்தது
தெற்கு மைலாடியில் 22 ஆம் ஆண்டு திருவிழா நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வைகைநல்லூர் தெற்கு கிராமத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 22 ஆம் ஆண்டு திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நேற்று, காவிரி தீர்த்தம் கொண்டுவரப்பட்டு சக்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை சக்தி மாரியம்மனுக்கு பொங்கல் மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து, கரகம் ஆற்றிற்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்புடைய செய்தி