கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெய்தலூர் காலனி மற்றும் நச்சலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் லாட்டரி சீட்டு விற்ற முதலைப் பட்டியைச் சேர்ந்த முருகன் 32, சேப்பலாபட்டியைச் சேர்ந்த செல்வம் 67, நச்சலூர் விஆர்ஓ காலனியை சேர்ந்த கருப்பையா 42, திருச்சி இனாம் புலியூரை சேர்ந்த சுப்பிரமணி 56 ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 55 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.