கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பாளையம், கருங்கலாப்பள்ளி, குப்பாச்சி பட்டி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற இளங்கோவன் 51, வீரமலை 60, அங்கம்மாள் 61, பழனி குமார் 45 ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 104 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.