கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டம் லாலாபேட்டை, நங்கவரம், மாயனூர், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக பிரகாஷ் (27), பூமாலை (52), கோபி (32), ராஜா (48), ராமச்சந்திரன் (47), சிவானந்தம் (32), அங்கமுத்து (40) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 160 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.