கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கருப்பையா 43. இவர் கடந்த 5 ஆம் தேதி பாதிரிப்பட்டி பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ராஜா என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் கருப்பையா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மனைவி மாலதி புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.