கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் புதல்வன் கிருஷ்ணசாமி கோவிந்தராஜன். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குளித்தலைக்கு பெருமை சேர்க்கும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அவர்களுக்கு குளித்தலை பகுதி வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்