கரூர் வாஞ்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சாந்தபிரியன் (28), கடந்த 25ஆம் தேதி முசிறியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கரூர்-திருச்சி மெயின் ரோட்டில் கார் மோதி வலது காலில் காயமடைந்தார். குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.