தமிழக வெற்றிக் கழகத்தின் குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கு. ப. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.