குளித்தலையில் 250 விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள்

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலையில், வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிட விவசாயிகள் நல மேம்பாட்டிற்கான திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சியை இன்று நடத்தியது. ஹைதராபாத் வேளாண் ஆராய்ச்சி இயக்குனர் ஷேக்மீரா, புதுடெல்லி பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனர் தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான்கள், பவர் டில்லர்கள், புல் வெட்டும் கருவிகள், மண்வெட்டிகள், கடப்பாரைகள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி