கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருணாகரன், கழுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதனூர், சங்காயிப்பட்டி, காந்திநகர் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது, பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்த கருணாகரன், தன்னை வெற்றி பெற செய்யுமாறு அப்பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டார்.