குளித்தலையில் காயம் அடைந்தவர்களை சந்தித்த அதிமுக பிரமுகர்

2பார்த்தது
குளித்தலையில் காயம் அடைந்தவர்களை சந்தித்த அதிமுக பிரமுகர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை. புதூர் சாலையில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 28 பேர் படுகாயமடைந்தனர். குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினர். இந்த நிகழ்வில் பல அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி