கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை பிரதான மாநில நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கு மயிலாடி செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து சேதமடைந்துள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் சாலை சீரமைக்கப்படும் வரை எந்த கட்சியினரும் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என பேனர் வைத்து அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.