கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் உள்ள ஸ்ரீ விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் இன்று சுவர்னகால பைரவ அஷ்டமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் வடை, தயிர் சாதம் வழங்கப்பட்டது. பைரவர் வேண்டுதலுடன் பிறந்த குழந்தை சார்பில் சிறப்பு அபிஷேக பூஜையும் நடத்தப்பட்டது. ஸ்ரீ கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தின் சிவம் ஆகியோர் இந்நிகழ்ச்சியை நடத்தினர்.