குளித்தலை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு

0பார்த்தது
குளித்தலை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான உணவு திட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, குளித்தலை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி