கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வெள்ளப்பட்டி செல்வ சீமான் நகரில் வசிக்கும் கணேசன் (31) என்பவரின் அண்ணன் லோகநாதன், மதுபோதையில் அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி, கணேசன் வீட்டில் இருந்தபோது லோகநாதன் வந்து கம்பியால் வீட்டின் முகப்பு கண்ணாடி ஜன்னலை அடித்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.