கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் ஊராட்சி கீழக்குறபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் 51. இவர் நேற்று தனது பைக்கில் வீட்டிற்கு செல்வதற்காக நாப்பாளையம் பிரிவு அருகே சென்றுள்ளார். அப்போது மகாதானபுரம் அடுத்த தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்த பரதன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ஸ்ரீதரிடம் இருந்த ரூபாய் 27360 பணத்தை பறித்து சென்று விட்டார். ஸ்ரீதர் சத்தம் போடவே அருகில் உள்ளவர்களை வருவதை பார்த்து கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டார். இது குறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.