கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலகம் அருகே ஏபிஎஸ் சில்க்ஸ் கடை முன்பு கடந்த 4ஆம் தேதி மாலை 7 மணியளவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பெலன்டர் பிளஸ் இருசக்கர வாகனம், அடையாளம் தெரியாத நபரால் மாற்று சாவியைப் பயன்படுத்தி திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. வாகனத்தை அடையாளம் கண்டால் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.