கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா திருமண மண்டபத்தில், குளித்தலை உட்கோட்ட காவல்துறை சார்பில் நகைக்கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிசிடிவி கேமரா பொருத்துதல், ஒலி எழுப்பும் கருவி அமைத்தல், தனியார் பாதுகாவலர்களை நியமித்தல், நகைகளின் தரத்தை முறையாகக் கண்டறிதல், அடகு வைப்போரின் விவரங்களை முழுமையாகச் சேகரித்தல், மீட்கப்படாத நகைகளை ஆய்வு செய்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நகைக்கடை உரிமையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.