குளித்தலையில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை

1பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை கிராமிய கூட்டரங்கில் காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு நிரப்பும் திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பு தலைவர் வலையபட்டி ஜெயராமன், நீர்வளத்துறையின் திருச்சி திட்ட வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளர் சுஜா, திட்ட வடிவமைப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் காவிரி உபரிநீரை சேமித்து விவசாய தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி