கருங்களாப்பள்ளியில் சேதமான மயான கொட்டகை

488பார்த்தது
கருங்களாப்பள்ளியில் சேதமான மயான கொட்டகை
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம், ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்களாப்பள்ளி பகுதியில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொது மயான கொட்டகை சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. 8 தூண்களில் ஒன்று முற்றிலும் சேதமடைந்து விழுந்த நிலையில், மற்ற தூண்களும் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிகாரிகள் உடனடியாக புதிய மயான கொட்டகை அமைத்து தர கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி