குளித்தலை: கல்லூரிக்கு சென்ற மகள் மாயம்.. தாயார் புகார்

1163பார்த்தது
குளித்தலை: கல்லூரிக்கு சென்ற மகள் மாயம்.. தாயார் புகார்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, சிவாயம் அடுத்த அய்யனூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி விஜயா (38) என்பவரின் மகள் கீதா (18), அய்யர்மலை அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், விஜயா குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன கீதா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி