கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனர். இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 272 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணி டிசம்பர் 4, 2025 வரை நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதுப்பித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.