தோகைமலை பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

0பார்த்தது
குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று கல்லடை, பில்லூர், பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட 38 கிராமங்களுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். கிராம கோவில்களில் சாமி தரிசனம் செய்த பிறகு, அப்பகுதி மக்களை 'உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்' என மன்றாடி கேட்டுக்கொண்டார்.
Job Suitcase

Jobs near you