திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், அதிமுக வேட்பாளரின் சொந்த ஊரான சூரியனூரில் வாக்கு சேகரிப்பின் போது, "உதயசூரியனின் கோட்டை இந்த தேர்தலில் நிருபித்து காட்டுவோம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தோல்வி என்றே தழுவாத ஒரே தலைவர் கலைஞருக்கு பிறகு எங்களது மாவட்ட கழக செயலாளர் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். சூரியனூர் சந்திரன் அல்ல வேட்பாளர். இங்கு நிற்பது வி. செந்தில் பாலாஜி எனும் மாமனிதர்" என்று சவால் விடுத்தார். இது அதிமுக வேட்பாளரின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் விடுத்த சவாலாக அமைந்துள்ளது.