குளித்தலையில் இரு சக்கர வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்

0பார்த்தது
குளித்தலையில் இரு சக்கர வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் கம்பத்தாம் பாறையைச் சேர்ந்த பொன்னம்மாள் (65) என்பவர் கடந்த 3ஆம் தேதி தோகைமலை கடைவீதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் வலது கால் தொடையில் பலத்த காயமடைந்த அவர், தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி