மருதூர் பேரூராட்சியில் நடைபெற்ற அவசரக் கூட்டம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் சமுதாய கூடத்தில் மருதூர் பேரூராட்சி அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணைத் தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வார்டு எண் இரண்டில் வீரம்பூரில் பயணியர் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி