கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை செர்வைட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் இன்று குளித்தலை தீயணைப்பு துறை நிலையத்திற்கு வருகை புரிந்தனர். அங்கு அவர்களுக்கு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன், மாணவிகளுக்கு தீயணைப்பு துறையினரின் செயல்பாடுகள், பேரிடர் மீட்பு குழுவினரின் பணிகள் குறித்தும், மீட்பு பணிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் விளக்கினார்.