கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி கம்பத்தான்பாறையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இவரின் கொழுந்தியா மகள் பாரதியை, அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் கடந்த மூன்று வருடங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கலைச்செல்வன் தினம் தோறும் குடிபோதையில் பாரதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதைக் கேட்ட பழனிச்சாமியை திட்டி தாக்கியுள்ளார். காயமடைந்த பழனிச்சாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்