குளித்தலையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் துவக்க விழா நிகழ்ச்சி

0பார்த்தது
குளித்தலையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் துவக்க விழா நிகழ்ச்சி
கரூர் மாவட்ட SDPI-கட்சியின் மகளிர் அணியான விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் (WIM)-ன் 11-ம் ஆண்டின் துவக்க தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை சிறப்பிக்கும் விதமாக, கரூர் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் காப்பகத்திற்கு உணவு வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட தலைவர் நூரிநிஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் விஜயா மேரி, மாவட்ட பொதுச் செயலாளர் ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். SDPI-கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர். மார்க் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், WIM மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி