கரூர் காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா உத்தரவின் பேரில், குளித்தலை உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் ஏற்பாட்டில், இன்று இரவு குளித்தலை அருகே அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் புதிய காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா இந்த உதவி மையத்தை திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள 38 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் தங்கராஜ், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.