குளித்தலை அரசு கல்லூரியில் பொருட்களின் இணையம் பயிற்சி பட்டறை

597பார்த்தது
குளித்தலை அரசு கல்லூரியில் பொருட்களின் இணையம் பயிற்சி பட்டறை
கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மாணவர்களுக்கு 'பொருட்களின் இணையம்' என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. மின்னணுவியல் துறை ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிக்கு, துறைத் தலைவர் முனைவர் அன்பரசு வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் கண்ணபிரான் இணைய வழியே மின்னணுப் பொருட்கள் தானாக இயங்கும் விதம் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி