கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் உள்ள பெரியநாயகி உடனுறை விராச்சிலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழாவை முன்னிட்டு, இன்று மலை உச்சியில் 48 மீட்டர் காடா துணியுடன் 15 கிலோ அளவுள்ள 49 டின் இலுப்பை எண்ணெய் மற்றும் 5 கிலோ தீப நெய் கொண்டு மகா தீபாரதனை ஏற்றப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு இனிப்பு பொங்கல் மற்றும் புளி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.