கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை மலைக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாத தீப திருநாளை முன்னிட்டு இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மலை மேல் ஏறி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.