கரூர்: விவசாயி கொலை; 3 பேருக்கு இரட்டை ஆயுள்

2பார்த்தது
கரூர்: விவசாயி கொலை; 3 பேருக்கு இரட்டை ஆயுள்
கரூரில் கல்குவாரிக்கு எதிராகப் போராடிய விவசாயி ஜெகநாதன், கடந்த 2022 செப்டம்பர் 10 அன்று சரக்கு வேன் மோதி உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம், கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமார் மற்றும் வேன் ஓட்டுநர்கள் சக்திவேல், ரஞ்சித்குமார் ஆகிய மூவருக்கும் கொலை மற்றும் உடந்தையாக இருந்த குற்றத்திற்காக தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி