கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியின் ஆலோசனை கூட்டம் குளித்தலை காவிரி நகரில் உள்ள கிராமிய கூட்ட அரங்கில் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி. எல். ஏ 2 விற்கான முகவர்கள் தேர்வு செய்தல், ஒன்றிய கவுன்சிலர்கள் வாரியாக ஒன்றியங்கள் பிரித்தல், பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்தல் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். மண்டல செயலாளர் வழக்கறிஞர் ஸ்டாலின், மண்டல துணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.