குளித்தலை அரசு கல்லூரி மாணவர்கள் லேப்டாப் கேட்டு போராட்டம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள், தங்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு முதல் இதுவரை அரசு சார்பில் லேப்டாப் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி கல்லூரி வளாகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021-22 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை படிப்பை முடித்தும், பின்னர் இளங்கலை கல்லூரி படிப்பை முடித்தும் லேப்டாப் வழங்கப்படாததால் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி