குளித்தலையில் 70 வயதை தாண்டிய ஏழு ஜோடிகளுக்கு மரியாதை

598பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 7 தம்பதியர்களுக்கு இன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், புத்தாடை அணிந்து வந்த தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்துக் கொண்டனர். அவர்களுக்கு வேட்டி, சட்டை, புடவை, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல், எவர்சில்வர் தட்டு, பழ வகைகள் வழங்கப்பட்டன. பின்னர் அனைவரும் கடம்பவனீஸ்வரரை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி