கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா அருகே வழிகாட்டி பெயர் பலகை மீது மரக்கிளைகள் மறைத்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து லோக்கல் ஆப் செய்தியில் இன்று காலை செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து குளித்தலை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் வழிகாட்டும் பெயர் பலகை மீது படர்ந்துள்ள கிளைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனர். குளித்தலை பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.