கரூர் மாவட்டம் குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 56 வயதான நூர், தனது வீட்டில் சுய லாபத்திற்காக வெளி மாநில மது பாட்டில்களை வாங்கி வந்து பதுக்கி விற்பனை செய்துள்ளார். மேலும், வீட்டில் மது அருந்த வருபவர்களுக்கு இறைச்சி உணவுகளை சமைத்துக் கொடுத்து வியாபாரம் செய்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குளித்தலை போலீசார் நூர் மீது வழக்கு பதிந்து நேற்று (மே 20) கைது செய்தனர்.