கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் நெல்லு பட்டியைச் சேர்ந்த பிலமின் ராஜ் (40) என்பவர், நேற்று வேங்கடத்தம்பட்டி பிரிவு சாலை அருகே தனது பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி எலிசபெத் ராணி அளித்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.