குளித்தலை காவிரி ஆற்றில் இறந்த நிலையில் ஆண் நபர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பாபு (43) என்பவர் காவிரி ஆற்றின் மூன்றாவது பாலக்கட்டை அருகே மணல்மேட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பாபுவின் மனைவி ராஜேஸ்வரி, மகன்களுடன் கழுகூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாபுவின் சகோதரர் கனகராஜ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.