கரூர் மாவட்டம், குளித்தலை, சுங்க கேட் பகுதியில் நேற்று (மே 14) மாலை நான்கு மணி அளவில், கரூர் புதிய அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற கமலக்கண்ணன் அவர்களை கரூர் மாவட்ட எல்லையான குளித்தலையில் அதிமுக தொண்டர்கள் பொன்னாடை போர்த்தி, மாலையிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் குளித்தலை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், வார்டு கிளைச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.