குளித்தலை சாலையில் அரசு பேருந்து கார் மோதியதில் ஒருவர் பலி

2பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூணாறு சுற்றுலா முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். குளித்தலை அருகே மேலக்குறப்பாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த அரசு பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 6 இளைஞர்கள் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி சந்தோஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி