கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே அறப்பளிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் 57. இவர் கடந்த 13ஆம் தேதி தனது டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் வாகனத்தில் மணத்தட்டை பஸ் டிப்போ அருகே சென்றுள்ளார். அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த கார் திடீரென வலது புறம் திரும்பியதில் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனம் மோதி கணேசன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.