கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் இராஜேந்திரம் ஊராட்சி வாலாந்தூர் கிராமத்தில் சாலை வசதி, பொதுக்கழிப்பிடம், பேருந்து வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி சிபிஐஎம் போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர். இது தொடர்பாக குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் இந்துமதி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அடிப்படை வசதிகள் படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.